|

ஸ்டண்ட்
மாஸ்டர் கனல் கண்ணன், ஸ்டண்ட் செய்வதுடன் நடிப்பதிலும் தீராத மோகம்
கொண்டவர் என்பது எல்லோருக்கும் தெரிந்த தகவல். அதற்கேற்றபடி படங்களில்
கனல் தெறிக்கும் சண்டைக் காட்சிகள் அமைப்பதுடன் சில சின்னச் சின்னக்
காரெக்டர்களில் குரங்கு சேஷ்டைகள் பண்ணி, அந்த வெறியைக் காட்டிக்
கொண்டும், தணித்துக்கொண்டும் வந்தார். சற்றுமுன் வந்த தகவல். கனல்
கண்ணன் ஹீரோவாக நடிக்கிறார். அதாவது 'சற்றுமுன் கிடைத்த தகவல்' என்ற
படத்தில் ஹீரோவாக! அதாவது பைத்தியக்கார விடுதியில் இருந்து தப்பித்து
வரும் ஹீரோ!
நாயகியாக 'அம்முவாகிய நான்' படத்தில் அறிமுகமான துணிச்சல் நாயகி பாரதி
நடிக்கிறார். இது இவருக்கு இரண்டாவது படம். டி.வி.தொடருக்குப்
போயிருக்கும் கௌசல்யா ஒரு முக்கியமான காரெக்டரில்
திரும்பியிருக்கிறார். விஜய் டி.வி.யில் கலக்கப்போவது யாரு' நகைச்சுவை
மிமிக்ரி புகழ்' சேது ஒரு சஸ்பென்ஸ் காரெக்டரில் கலக்குகிறார்.
மற்றும் ஸ்ரீமன்,
கருணாஸ், கிரேன் மனோகர் ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.
ஒளிப்பதிவு ஆர்.செல்வா, இசை பாலா (அறிமுகம்), பாடல்கள் - கிருத்யா,
யுகபாரதி, பாலா, படத்தொகுப்பு - தணிகாசலம், கலை வெங்கல்ராவ்,
சண்டைப்பயிற்சி - கனல் கண்ணன், தயாரிப்பு நிர்வாகம் - மதுரை ராஜா,
மக்கள் தொடர்பு - நிகில் முருகன்.
அரண்மனை போன்ற ஒரு வீட்டில் தனியாளாக உலாவிக் கொண்டிருக்கும் இளம்பெண்
பாரதி, பைத்தியக்கார விடுதியிலிருந்து தப்பித்து வந்து அங்கு ஒண்டும்
கனல் கண்ணன், பாரதியைக் காக்க வந்த ரட்சகனைப் போல் அங்கு போலீஸ்
உடையில் வரும் சேது இவர்களுக்கிடையே ஒரு நிமிஷம் நகைச்சுவை மறுநிமிஷம்
திகில். இதுதான் 'சற்றுமுன் கிடைத்த தகவ'லாம்!
- மருதம்
|
|