நியூலைட் புரொடக்ஷன்ஸ் 'சில நேரங்களில்' என்று ஒரு தமிழ்ப்படத்தைத் தயாரித்து வருகிறது.

இதன் தயாரிப்பாளர்கள் அமெரிக்காவில் வாழும் நான்கு கம்ப்யூட்டர் இன்ஜினியரிங் இளைஞர்கள். இவர்களுக்குப் பூர்வீகம் ஆந்திரப்பிரதேசம்.

கதையை ஹாலிவுட்டில் இருக்கும் இந்திய சினிமா எழுத்தாளர் ராஜ் என்பவர் எழுதியிருக்கிறார். கதைக்கு இயக்குனரை தங்களின் இணையத்தளத்தின் மூலமும் தயாரிப்பாளர்கள் தேடியிருக்கிறார்கள். என்றாலும் இறுதியில் படத்திற்குப் பொருத்தமான இயக்குநராக வாய்த்தவர் ஜெயராஜ். இவர் மலையாளத்தில் குறிப்பாக வித்யாரம்பம், தெய்வநாமத்தில், ஜானிவாக்கர், தேசானடனம், களியாட்டம், கர்ணம், சாந்தம், 4 ஸ்டூடண்ட்ஸ் முதலான படங்கள் உள்ளிட்ட 29 படங்களை இயக்கியவரும், நான்கு தேசிய விருதுகளைப் பெற்றவருமாவார்.

படத்தின் நாயகன் வின்சென்ட் அசோகன், 'ஏய், போக்கிரி, ஆழ்வார் முதலான படங்களில் வில்லனாக நடித்தவர். இவர் பழைய பிரபல வில்லன் அசோகனின் மகன் என்பது தெரிந்திருக்கலாம். ஆன்டி ஹீரோவாக நடிக்கிறார். மற்றும் வினித், ரகுவரன்,
ஸ்ரீமன், ரமேஷ் கண்ணா, சந்திரசேகர், மனோபலா, நவ்யா நாயர், சுகுமாரி, பாத்திமா பாபு, பல்லவி, ஆர்த்தி முதலானோரும் நடிக்கின்றனர்.

படத்தில்
ஸ்ரீகாந்த் தேவாவின் இசையில் வைரமுத்துவின் வரிகளில் பழம்பெரும் பாடகி பி.சுசீலா பாடிய பாடலொன்றையும் டி.எம்.எஸ். குரலில் அவருடைய மகன் டி.எம்.எஸ். பால்ராஜ் பாடிய ஒரு பாடலையும் கேட்டு ரசிக்கலாமாம்.



Copyright © 1999 Ambalam, DishnetDSL.Ltd.