|

கிராபிக்ஸ் பிரியர்களுக்கு
ஒரு ஸ்வீட் செய்தி. ஆம். உலகிலேயே முதல்... முதல்... முதல் தமிழ்
அனிமேஷன் படமொன்று இப்போது பிரம்மாண்டமாக உருவாக்கப் பட்டிருக்கிறது.
அதுதான் மாயபிம்பம் மீடியா கம்பெனி தயாரித்துள்ள 'இனிமே நாங்கதான்.'
இளையராஜா - வாலி - பி.லெனின் - சிவசங்கர் என சினிமாவின் ஜாம்பவான்கள்
கைகோர்க்கும் படம் இது.
இந்தியாவில் முன்பும் சில அனிமேஷன் பட முயற்சிகள் நடந்ததுண்டு. ஆனால்
அனைத்தும் புராணப் படங்களே! 'இனிமே நாங்கதான்' முழுக்க முழுக்க தமிழ்
மண்ணில் ஒரு கிராமத்தில் நடக்கக் கூடியக் கதை.
வைத்தி, வரது, விச்சு, கோவிந்து என்று கதைக்கு நான்கு பிரதானக்
கதாபாத்திரங்கள். ஆங்கிலப் படங்களில் மட்டுமல்ல தமிழிலும் புருவத்தை
விரியவைக்கும் அனிமேஷன் கொண்டாட்டங்கள் உண்டு என்பதை இந்தப் படம்
அழுத்தம்திருத்தமாக நிரூபிக்கப் போகிறது. இளையராஜா ஒரு தமிழ் அனிமேஷன்
படத்துக்கு இசையமைப்பது இதுவே முதல்முறை. பாடல் - வாலி. நான்கு
கதாபாத்திரங்களுக்கும் குரல் கொடுத்திருப்பவர்கள் பாண்டு,
எம்.எஸ்.பாஸ்கர், வாசு விக்ரம் மற்றும் மாறன். தயாரிப்பு -
ஸ்ரீதேவி,
இயக்குநர் வெங்கி பாபு.
இந்தப் படத்தின் பட்ஜெட்? மூன்றரைக்
கோடி !!! |
|