|

தெலுங்கில் 'எவடேடே நாகேந்தி' என்ற பெயரில்
மாபெரும் வெற்றி பெற்ற படம்தான் தமிழுக்கு ஏற்றவாறு பல மாற்றங்கள்
செய்து படமாக்கப்பட்டு வருகிறது.
ராஜசேகரின் ஜோடியாக சம்விருதா, இவர்களுடன் முக்கிய வேடத்தில்
முமைத்கான், ரகுவரன், கலாபவன் மணி, கோட்டா
ஸ்ரீனிவாசராவ், தேவராஜ்
உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர்.
கதாநாயகன் சூர்யா நன்கு படித்தவர். இந்திய ராணுவத்தில்
பணியாற்றிவிட்டு ஊருக்குத் திரும்புகிறார். அனைத்து இந்திய
குடிமகன்களும் நாட்டுக்காக நற்பணி செய்யவேண்டும் என்ற நம்பிக்கை
கொண்டவர். இந்த சூழ்நிலையில் தேர்தலில் நின்று உள்துறை அமைச்சராக
பொறுப்பேற்கிறார் சூர்யா. ஒரு உள்துறை அமைச்சர் எவ்வாறு
செயல்படவேண்டும் என்று மக்களுக்கு உணர்த்துகிறார்.
எந்தவித தண்டனையும் அளிக்காமல் வில்லன்களை எவ்வாறு பணிய வைக்கிறார்
என்பதை அனைத்து தரப்பினரும் ரசிக்கும் வண்ணம் ஜனரஞ்சகமாக இயக்குகிறார்
திருமதி. ஜீவிதா ராஜசேகர். தமிழில் இவர் இயக்கும் முதல் நேரடி படம்
இது.
இப்படத்திற்கு ஒளிப்பதிவு - ஏ.மது, எடிட்டிங் - என்.ஹரி,
சண்டைப்பயிற்சி - கனல் கண்ணன், ராஜு, வசனம் - வி.செல்வா,
கதை-திரைக்கதை - டாக்டர் ராஜசேகர், இசை - சின்னா, கலை - ரமணா, நடனம்
- கிருஷ்ணா ரெட்டி, மக்கள் தொடர்பு - நிகில், தயாரிப்பு - ஆண்டாள்
ஆர்ட்ஸ், இயக்கம் - ஜீவிதா ராஜசேகர்.
|
|