'பல்லவன்' படத்திற்குப் பிறகு பார்க்கர் பிரதர்ஸ் தயாரிக்கும் படம் 'அம்முவாகிய நான்'.

''கண்களில் தொடங்கிய மனங்களைப் பரிமாறிக் கொள்ளும் காதலைச் சொல்லிவந்த தமிழ்த்திரையுலகில் முதன்முதலாக காமத்தில் காதலைத் தொடங்கிவைக்கும் இப்படத்தில் வாழ்க்கையின் யதார்த்தங்களைத் தேடிச் செல்லும் ஒருவனும் வாழ்க்கையில் யதார்த்தங்களைத் தொலைத்துவிட்டு வாழும் ஒருவளும் சங்கமிக்கிறார்கள்' என்கிறார் எழுதி இயக்கும் பத்மா மகன். இவர் 'பல்லவன்' படத்திற்குப் பிறகு இயக்கும் படம் இது.

கதையினைக் கேட்டுவிட்டு, ''இந்தப் படம் என் சினிமா வாழ்வில் சிறந்த மூன்று படங்களில் ஒரு படமாக இருக்கும்'' எனக் கூறினாராம். இப்படத்தில் ஓர் எழுத்தாளராக அழுத்தமான கதாபாத்திரத்தில் நடிக்கும் ஆர்.பார்த்திபன். பல தமிழ் முன்னணி நடிகையரும் சில முன்னணி மும்பை நடிகையரும்கூட நடிக்கத் தயங்கிய முரண்பாடான கதாபாத்திரத்தில் தைரியமாக நடிக்க முன் வந்தாராம் கொங்குநாட்டைச் சேர்ந்த அறிமுக தமிழ் நாயகி பாரதி. இவர் ஏற்றிக்கும் பாத்திரம் பாலியல் தொழிலை விருப்பத்துடன் ஏற்ற ஒரு பெண்ணினுடையது.

ஒளிப்பதிவு - எம்.எஸ்.பிரபு, வசனம் - செ.சுருளிராஜன், பாடல்கள் - பழனிபாரதி, இசை - சபேஷ் முரளி, படத்தொகுப்பு -சுரேஷ் அர்ஸ், கதை-திரைக்கதை-இயக்கம் - பத்மா மகன்.

ரூபஸ் பார்க்கரின் தயாரிப்பில் பி.எஸ்.சேகர் வழங்க, பாண்டிச்சேரி, சென்னை, செஞ்சிக்கோட்டை பகுதிகளில் படமாகிவரும் 'அம்முவாகிய நான்' பிப்ரவரியில் திரைக்கு வரும்.

- மருதம்



Copyright © 1999 Ambalam, DishnetDSL.Ltd.