இயக்குனர் ஷங்கரின் தயாரிப்பில் இயக்குனர் பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் வெளிவரவிருக்கும் திரைப்படம் 'கல்லூரி'. எஸ்.பிக்சர்ஸ் நிறுவனத்தின் வெற்றிப்பட வரிசையில் 'காதல்', 'இம்சை அரசன் 23ம் புலிகேசி', 'வெயில்' படங்களைத் தொடர்ந்து அடுத்து திரைக்கு வரவிருக்கும் இப்படத்தின் இறுதிகட்ட வேலைகள் துரிதமாக நடந்துவருகின்றன. பாலாஜி சக்திவேல் 'காதல்' படத்தைத் தொடர்ந்து மூன்றாண்டுகள் இடைவெளிக்குப் பிறகு இயக்கிவரும் படம் இது. இப்படத்தின் படப்பிடிப்பு சிவகங்கையில் தொடங்கி மதுரையில் வளர்ந்து ஆந்திராவில் முடிவடைகிறது.

கதை நாயகி தமண்ணா, கதை நாயகனாக அகில் இவர்களின் நண்பர்களாக பாலமுருகன், ஹேமா, சாய்லதா, ராஜேஸ்வரி, மாயாரெட்டி, அருண்குமார், அலெக்ஸ், பிரகாஷ் ஆகியோர் அறிமுகமாகின்றனர்.

இந்த பணிக்கு மிக உறுதுணையாக தனது ஒளிப்பதிவை மிக ஆழமாக, அழகாக, தோள் கொடுத்து உதவியிருக்கிறார், ஒளிப்பதிவாளர் திரு.செழியன்.

கல்லூரியில் தற்சமயம் படித்துக் கொண்டிருப்பவர்களுக்கும் படித்து முடித்தவர்களுக்கும், கல்லூரியை எட்டமுடியாதவர்களுக்கும் ஓர் உண்மையான கல்லூரி வாழ்க்கையினை பதிவு செய்யப்பட்டிருக்கிறதாம்.

இதர தொழில்நுட்ப கலைஞர்கள்

இசை - ஜோஷ்வா
ஸ்ரீதர், கலை - மயில்கிருஷ்ணன், B.F.A., படத்தொகுப்பு - ஜி.சசிகுமார், பாடல்கள் - நா.முத்துக்குமார், ஒளிப்பதிவு - ஜி.கிருஷ்ணன், D.F.T., உடையலங்காரம் - சீனு, ஒப்பனை - ரா, நடனம் - கந்தாஸ், தயாரிப்பு மேற்பார்வை - திண்டுக்கல் சிவராமன், கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் - பாலாஜி சக்திவேல்.



Copyright © 1999 Ambalam, DishnetDSL.Ltd.