|

சூப்பர் குட் பிலிம்ஸ் (பி) லிட்., R.B.
சௌத்ரியின் ஜீவா நடிக்கும் ஈ
ஈ என்றால் ஈஸ்வர். ஆனால் அவனுக்கே இது தெரியாது. தனது பெயரை அவனே ஈ
என்றுதான் கையெழுத்திடுவான். அப்படி ஒரு வித்தியாசமானவனாம் ஈ.
யாருக்குமே பிடிக்காத அறுவெறுப்பான கேரக்டர் அவனுடையது. ஏன் அவன்
அப்படி ஆனான்? எப்படி அவன் ஹீரோவாகிறான் என்பதே ஈ - யின் அழகான
திரைக்கதை.
ஜீவா ஜிம்னாஸ்டிக் கற்றவர் அதோடு முறையாக
ஜூடோ
பயின்றவர் என்பதால் சண்டைக் காட்சிகளில் ஒரிஜினாலிட்டி இருக்குமாம்.
அசினா.. எம்.ஜி.ஆர் நடித்த உலகம் சுற்றும் வாலிபன் படத்தில் வரும்
அவள் ஒரு நவரச நாடகம் பாட்டிற்காக அண்டர் வாட்டர் செட்டில்
எம்.ஜி.ஆரோடு நடனமாடியவர். ஈ படத்தில் ஒரு முக்கியமான கேரக்டரில்
கலக்கி இருக்கிறார்.
நயன்தாரா கேரக்டரில் ஒரு கிக் இருந்தாலும், மும்பை உண்மை நிகழ்ச்சியை
கதையில் மையப்படுத்தியிருக்கிறார் இயக்குனர் ஜனநாதன். |
|