|

பாலா இயக்கத்தில் உருவாகும் படம் 'நான்
கடவுள்'. முதலில் இப்படத்தில் அஜீத் நடிப்பதாக இருந்தது. இப்போது
ஆர்யா கதாநாயகனாக நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக பாவனா நடிக்கிறார்.
இப்படத்தில் பாவனா கண் தெரியாத பெண்ணாக நடித்துள்ளார். இதற்கென்று
விசேஷமான ஒரு லென்ஸ் அணிந்துகொண்டு நடிக்கிறார். இந்த லென்ஸ் அணிந்த
கொண்டால் நிஜமாகவே கண் தெரியாது. அதனால் இவருடைய காட்சிகள் மிகவும்
இயல்பாக வரவேண்டும் என்பதற்காக படப்பிடிப்பின் இடைவேளையின்போது கூட
பாவனா அந்த லென்ஸ் அணிந்துகொண்டே இருக்கும்படி இயக்குநர்
கூறிவிட்டாராம்.
இப்படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளார். தயாரிப்பு - பி.எல்.
தேனப்பன். |