இயக்குனர் ஷங்கரின் சொந்த திரைப்பட தயாரிப்பு நிறுவனமான 'எஸ் பிக்சர்ஸ்', முதல்வன், காதல், இம்சை அரசன் 23ம் புலிகேசியைத் தொடர்ந்து தயாரிக்கும் நான்காவது படம் 'வெயில்'. ஷங்கரின் முக்கிய உதவியாளர் ஜி.வசந்த பாலன் இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார்.

பரத், பசுபதியுடன் இணைந்து கதாநாயகிகளாக பாவ்னா, எஸ்.எஸ்.ம்யூசிக் ஷ்ரேயா ரெட்டி நடிக்க, கேரளாவைச் சேர்ந்த பிரியங்கா புதுமுகமாக அறிமுகமாகிறார்.
பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானின் அக்கா மகன் ஜி.வி.பிரகாஷ் குமார் 'வெயில்' படததின் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார்.

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானிடம் Swadesh, கிருஷ்ணா, மங்கள் பாண்டே, ரங்குதே பாசந்தி, சுபாஷ் சந்திரபோஸ் போன்ற இந்திப் படங்களுக்கும் அன்பே ஆருயிரே என்ற தமிழ் படத்திற்கும் keyboard playerயாக பணிபுரிந்துள்ளார். ஜி.வி. பிரகாஷ்குமாருக்கு வயது பதினெட்டு என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படத்திற்கு ஒளிப்பதிவை மதியும், மலையாளபட உலகின் முன்னணி ஒளிப்பதிவாளரான என்.அழகப்பனும் செய்துள்ளனர்.

இப்படத்தின் 5 பாடல்களை நா.முத்துக்குமாரும், ஒரு பாடலை புது கவிஞர் ஏகாதசியும், இன்னொரு பாடலை தமிழ்நாட்டின் முன்னணி கிராமிய கலைஞர்களும் இயற்றியுள்ளனர்.

சண்டைக்காட்சிகள் - சூப்பர் சுப்பராயன், எடிட்டிங் - ஜி.மதன், கலை- கே.வீரசமர், நடனம் -
ஸ்ரீதர், 'காதல்' கந்தாஸ், சாந்தி, பாலாஜி.



Copyright © 1999 Ambalam, DishnetDSL.Ltd.