|

'ஜெயம்' ரவி கதாநாயகனாகவும் த்ரிஷா
கதாநாயகியாகவும் நடித்துள்ள படம் இது.
முத்துப்பாண்டி என்கிற விவசாயி தன் தங்கை கவிதாவுடன் பாசத்தோடு
கிராமத்தில் வாழ்ந்து வருகிறான். ஒருநாள் தன் தங்கையை அவளது தோழி
லலிதாவின் திருமணத்திற்காக சென்னைக்கு அனுப்பி வைக்கிறான். அதே
திருமணத்திற்கு லலிதாவின் அத்தை மகன் சந்தோசும் அவனது அம்மா பார்வதியும்
லண்டனிலிருந்து வருகிறார்கள். பிறகு அந்த திருமண வீட்டில் கவிதாவும்,
சந்தோசும் அடிக்கடி சந்திக்க நேரிடுகிறது. ஆரம்பத்தில் மோதலில்
ஆரம்பமான இவர்களது நட்பு, பிறகு காதலாக மாறுகிறது. இவர்களது காதல்
பார்வதிக்கு தெரியவர கவிதாவையும் அவளது அண்ணன் முத்துப்பாண்டியையும்
அவனது விவசாய வாழ்க்கையையும் அவமானப்படுத்தி வீட்டை விட்டு
அனுப்பிவிடுகிறாள். பிறகு காதலின் பிரிவை தாங்கமுடியாத சந்தோஷ், தன்
தாயுடன் லண்டனுக்கு செல்லாமல், அவளை ஏமாற்றிவிட்டு, கவிதாவை தேடி அவளது
கிராமத்திற்கு வருகிறான். இவனை பார்த்த முத்துபாண்டி தன் தங்கையை
திருமணம் செய்யவேண்டுமானால் நீ விவசாய வாழ்க்கை வாழவேண்டும் என்று கூற
அதை செய்து காதலில் எப்படி வெற்றி பெறுகிறான் என்பதை ஜனரஞ்சகமாக
படமாக்கியுள்ளனர்.
இப்படத்திற்கு ஒளிப்பதிவு - ஏ.வெங்கடேஷ், எடிட்டிங் - சுராஜ்கவி,
தயாரிப்பு - டி.ராமாராவ், எடிட்டர் - மோகன், திரைக்கதை, இயக்கம் - ஜெயம்
எம்.ராஜா. |
|