வேட்டையாடு விளையாடு படத்தை செவன்த் சேனல் மாணிக்கம் நாராயணன் தயாரிக்கிறார்.

கமல்ஹாசன் கதாநாயகனாக துப்பறியும் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக ஜோதிகா. இன்னொரு ஜோடியாக பிரபல தெலுங்கு நடிகை கமலினி முகர்ஜி நடிக்கிறார்.

கமலுடன் வேலை செய்யும் சக அதிகாரி கொலைச் செய்யப்படுகிறார். கொலையாளி தப்பி ஓடி அமெரிக்காவுக்கு சென்றுவிடுகிறான். அவனை பிடிப்பதற்காகவும், கொலை மர்மம் பற்றி துப்பு துலக்கவும் கமல் அமெரிக்கா செல்கிறார். துப்பறியும் கதை என்பதால் திடுக்கிடும் சம்பவங்களுக்கு குறைவே இருக்காது என்று நம்பலாம்.

ஒரு சண்டைக்காட்சியில் 50 அடி உயர கட்டிடத்தில் இருந்து குதிப்பதுபோல் காட்சி. இதில் டூப் போடாமல் கமல் தானே ரிஸ்க் எடுத்து நடித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு வேகமாக நடந்து வருகிறது. கொலையாளி அமெரிக்காவுக்கு தப்பி செல்வதால், 30 நாட்கள் படப்பிடிப்பு அமெரிக்காவில் நடந்தது.

 



Copyright © 1999 Ambalam, DishnetDSL.Ltd.