|

பகல்நிலவு, மௌனராகம், நாயகன், அக்னி
நட்சத்திரம், தளபதி, ரோஜா, பம்பாய் உள்ளிட்ட ஏராளமான வெற்றிப் படங்களை
இயக்கியவரும் மெட்ராஸ் டாக்கீஸ் சார்பில் அலைபாயுதே, கன்னத்தில்
முத்தமிட்டால், ஆய்த எழுத்து உள்ளிட்ட படங்களை தயாரித்து
இயக்கியவருமான மணி ரத்னம் புதிய படம் ஒன்றை ஹிந்தி-தமிழில் மிகுந்த
பொருட்செலவில் பிரம்மாண்டமாக தயாரிக்கிறார்.
'குரு' எனப் பெயரிடப்பட்டிருக்கும் இப்படத்தில் கதாநாயகனாக
அபிஷேக்பச்சன் நடிக்க, கதாநாயகியாக ஐஸ்வர்யா ராய் நடிக்கிறார்.
இவர்களுடன் மாதவன், மிதுன்சக்ரவர்த்தி, பிரதாப்போத்தன், லஷ்மிரத்தன்,
வித்யாபாலன், மல்லிகா ஷராவத், பேபி ஆஷா, பேபி அனுஷ்கா, மாஸ்டர் சன்னி
உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.
இப்படத்தின் நாயகன் குருவும் சிறுவயதிலிருந்தே வாழ்க்கையில் மிகவும்
உயர்ந்த நிலையை அடையவேண்டும் என கனவு காண்கிறான். அந்த கனவு நனவாக
சமூகத்தில் தனி ஆளாக நின்று போராடி, எதிர்ப்புகளை முறியடித்து எப்படி
முதன்மை நிலையினை அடைகிறான் என்ற கருத்தினை முற்றிலும் மாறுபட்ட
கோணத்தில் புதிய, அழகிய வடிவத்தில் ஜனரஞ்சகமாக இயக்கியிருக்கிறார் மணி
ரத்னம்.
ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க, பம்பாய் படத்திற்கு பின் ராஜீவ்மேனன்
இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார். பாடல்கள் - கவியரசு வைரமுத்து,
எடிட்டிங் -
ஸ்ரீகர்பிரசாத், சண்டைப் பயிற்சி - விக்ரம் தர்மா, கலை -
சமீர்சந்தா, நடனம் - சரோஜ் கான்-பிருந்தா, ஆடியோகிராஃபி - எச்.ஸ்ரீதர்,
தயாரிப்பு - மணிரத்னம்-ஜி.ஸ்ரீனிவாசன், எழுத்து-இயக்கம் - மணிரத்னம். |
|