ஜெமினி புரொடக்ஷன்ஸ் என்ற சொந்த பட நிறுவனத்தின் சமீபத்திய வெளியீடான 'ஆறு' படத்தை தயாரித்தார் சரண். இதைத் தொடர்ந்து மிகவும் பிரம்மாண்டமான தயாரிப்பில் 'வட்டாரம்' என்ற புதிய படம் தயாராகிறது.

இதில் ஆர்யா கதாநாயகனாக நடிக்கிறார். இவரின் ஜோடியாக பிரபல தெலுங்கு கதாநாயகி அனுஷ்கா தமிழில் இந்தப் படத்தின் மூலம் அறிமுகமாகிறார்.

மற்றும் ஆசிஷ் வித்யார்த்தி, ரமேஷ் கண்ணா, தண்டபாணி, புதுமுகம் கார்த்திக், அனூப்,
ஸ்ரீநாத் ஆகியோரும் நடிக்கிறார்கள்.

இப்படத்திற்கு இசை - பரத்வாஜ், ஒளிப்பதிவு - ஏ.வெங்கடேஷ், தயாரிப்பு-கதை-திரைக்கதை-வசனம்-இயக்கம் என்று சகல பொறுப்புகளையும் ஏற்றிருப்பது சரண்.



Copyright © 1999 Ambalam, DishnetDSL.Ltd.