பல வெற்றிப்படங்களைத் தந்த சத்யஜோதி ஃபிலிம்ஸ் அடுத்து தயாரிக்கும் படம் 'எம்டன் மகன்'. இந்நிறுவனம் தனது வெள்ளிவிழா ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது.

இதில் கதாநாயகன் பரத், கதாநாயகி கோபிகா. மற்றும் சரண்யா, கஜாலா, நாசர், வடிவேலு ஆகியோரும் நடிக்கின்றனர். 'மெட்டிஒலி' தொடரை இயக்கிய எம்.திருமுருகன்தான் இப்படத்தை இயக்குகிறார்.

இப்படத்தில் நகைச்சுவைக் கென்று தனியாக ட்ராக் கிடையாதாம். கதையோடு ஒட்டிய நகைச்சுவையாக இருக்குமாம். 'மெட்டி ஒலி' கேமராமேன் சேவிலோ ராஜா, வசனகர்த்தா பாஸ்கர் சக்தி, படத் தொகுப்பாளர் எம்.ஜெயக்குமார்.

இசையமைப்பு - வித்யாசாகர், பாடல்கள் - கபிலன், முத்துகுமார், பா.விஜய், யுகபாரதி, பாஸ்கர் சக்தி, நடன அமைப்பு - கந்தாஸ், ஆர்ட் இயக்குநர் - கதிர்.



Copyright © 1999 Ambalam, DishnetDSL.Ltd.