ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்தின் சார்பாக தயாரிப்பாளர் K.E. ஞானவேல்ராஜா இரண்டு திரைப்படங்கள் தயாரித்து வருகிறார். ஒன்று 'பருத்தி வீரன் மற்றொன்று 'சில்லுன்னு ஒரு காதல்'.

உண்மைச் சம்பவத்தினை மையக்கருவாக கொண்டு சில்லுன்னு ஒரு காதல் திரைப்படத்தினை கிருஷ்ணா இயக்குகிறார்.

இதுவரை தெலுங்கு படங்களுக்குகூட அனுமதி மறுக்கப்பட்ட 1500 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள ஆந்திர பல்கலைக் கழகத்தில், சிறப்பு அனுமதி பெற்று சூர்யா, பூமிகா இவர்கள் சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டன.

கோவை நகரின் மையத்தில் பிரம்மாண்டமான கால்பந்தாட்ட மைதானம் அமைத்து படம்பிடிக்கப்பட்டது.

முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக மூடிக் கிடந்த புகழ்பெற்ற மிகவும் பழமை வாய்ந்த பட்சிராஜா ஸ்டூடியோவில் சிறப்பு அனுமதி பெற்று சூர்யா சம்பந்தப்பட்ட சண்டைக்காட்சியை விறுவிறுப்புடன் ஸ்டண்ட் மாஸ்டர் விக்ரம்தர்மா அமைத்துக் கொடுத்தார்.

இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். பாடல்கள் - கவிஞர் வாலி, கதை - ஏ.சி.துரை, ஸ்டண்ட் - விக்ரம் தர்மா, மக்கள் தொடர்பு - நிகில், ஒளிப்பதிவு - ஆர்டி. ராஜசேகர், எடிட்டிங் - ஆண்டனி, கலை - ராஜீவன், நடனம் - பிருந்தா, தயாரிப்பு நிர்வாகம் - ஷாம், நிர்மல் செல்வகுமார், ஸ்டில்ஸ் - ஸ்டில்ஸ் விஜய், டிசைன்ஸ் - சபீர், தயாரிப்பு மேற்பார்வை - ராஜா
ஸ்ரீதர், வர்த்தக ஒருங்கிணைப்பு - பி.சக்திவேல், இணைத்தயாரிப்பு - ஆர்.பிரகாஷ் பாபு, தயாரிப்பு - கே.ஈ.ஞானவேல் ராஜா.

திரைக்கதை, வசனம், இயக்கம் - கிருஷ்ணா.



Copyright © 1999 Ambalam, DishnetDSL.Ltd.