|

'காதலன்' என்பதற்கு தமிழில்
வழங்கும் எத்தனையோ வார்த்தைகளில் இதுவும் ஒன்று. ஆனால் அந்த பெயரில்
ஏற்கெனவே தமிழ்ப்படம் வந்துவிட்டதாலும், தமிழில்தான் படத்தலைப்பு
என்று ஒரு குழு சதிராட்டம் ஆடி அடங்கியிருப்பதாலும் - தேவையில்லாமல்
யார் வாயிலும் விழுந்து சிக்கிக் கொள்ளாமல் இருக்க, கொஞ்சம்
முன்ஜாக்கிரதையாக கே.பி. இந்தப் பெயரைத் தேர்ந்தெடுத்திருக்கிறார்
போல! கே. பாலசந்தரின் கவிதாலயா தயாரிக்கும் இந்தப் படத்தில் ஜெயம் ரவி
கதாநாயகனாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக மும்பை இறக்குமதி - காம்னா.
முழுபெயர் காம்னா ஜெத்மலானியாம். 'ஜெத்மலானி' என்ற பின்னொட்டைக்
காரணம் காட்டி, 'இவர், பிரபல வழக்கறிஞர் ராம் ஜெத்மலானியின் பேத்தி'
என்று ஒரு தகவல் வலம் வரத் தொடங்கியுள்ளது. இந்தப் படத்தில் வாணி
விஸ்வநாத், நாசர், பிருத்விராஜ், கல்பனா, காகா ராதாகிருஷ்ணன்,
ஞானசம்மந்தன், ஜெயச்சந்திரன், மதன்பாப், கிரேஸி மோகன், மீரா கிருஷ்ணன்,
லொள்ளு சந்தானம், எம்.எஸ்.பாஸ்கர் போன்றவர்கள் நடிக்கின்றனர். கதை,
திரைக்கதை, இயக்கம் - கேபியின் சிஷ்யன் சரண். இசையமைப்பது பரத்வாஜ்.
பரத்வாஜும், சரணும் இணையும் எட்டாவது படம் இது என்று புள்ளிவிபரம்
தருகிறார்கள். இப்படத்திற்கான பாடலை வைரமுத்து எழுத, படப்பிடிப்பு
பணிகளுக்கு வெங்கடேஷ் பொறுப்பேற்றுள்ளார். வசனம் - கிரேஸி மோகன்.
காம்னா பற்றி இன்னொரு கிசுகிசு - இவர் இணையத்தின் மூலம் வலைவிரித்து
தேடியதில் சிக்கிய 100 பெண்களிலிருந்து படிப்படியாக வடிகட்டி
இறுதியில் மிஞ்சியவராம். அப்ப... இந்த மாதிரிகூட, அதிர்ஷ்டம் அழைக்க
வாய்ப்பிருக்குன்னு தெரியுதா?
|
|