|

தமிழ் எழுத்தின் ஆரம்பம் 'அ'கரம்.
ஸ்ரீ
புவனேஸ்வரி பிக்ஸர் தயாரிப்பில் உருவாகும் மிகப் பெரிய பிரம்மாண்டமான
ஆக்ஷன் திரைப்படம். நந்தா இப்படத்தில் முதன்முறையாக ஆக்ஷன் ஹீரோவாக
நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக அர்ச்சனா என்ற பிரபல தெலுங்கு நடிகை
இப்படத்தில் அறிமுகமாகிறார். நடிகை சீதா நந்தாவுக்கு அம்மாவாக
வருகிறார். இப்படத்தில் விவேக்கின் நகைச்சுவை காட்சிகள் வித்தியாசமாக
அமைந்துள்ளது. படத்தில் வரும் நந்தா, வில்லன் பிஜுமேனன்
சண்டைக்காட்சிகளை நடுக்கடலில் 30க்கும் மேற்பட்ட தோணிகளுடன்,
100க்கும் மேற்பட்ட சண்டை நடிகர்களை வைத்து படமாக்கியுள்ளனர்.
இப்படத்திற்கு சண்டைப் பயிற்சி சூப்பர் சுப்பராயன்.
கவர்ச்சிக்கு ஒரு ஆட்டமும் உண்டு. மும்பை இறக்குமதி 'ஷீத்தல்'
இப்படத்தில் ஒரு பாடலுக்கு மட்டும் ஆடுகிறார். பாடல்கள்-சினேகன்,
இசை-யுவன் சங்கர் ராஜா. இப்படம் விரைவில் திரைக்கு வருகிறது. |
|