வல்லவன் படத்தை இயக்கப் போகும் சிலம்பரசன் இதற்கான கதையை தயாரிப்பாளர் பி.எல்.தேனப்பனிடம் சொல்லத் தொடங்கியபோது மனுஷன் கொஞ்சம் ஆடித்தான் போய்விட்டாராம். நள்ளிரவு நேரத்தையொட்டி தொடங்கிய இந்த கதை சொல்லல் விடிகாலை கோழி கூவும் நேரம்வரை நீடித்ததாம். அப்போதே ஒகே சொல்லிவிட்ட தயாரிப்பாளர் இந்தப் படத்தில் சிம்புவுடன் நடிக்க 3 கதாநாயகிகளுக்கு ஓகே செய்துள்ளாராம். நயன்தாரா, சந்தியா, ரீமாசென். அதோடு இந்த பேச்சையொட்டி நடந்த விவாதத்தின்போது வெளியாக இருக்கும் தேனப்பனின் படம் 'கனாக் கண்டேன்' படத்தைப் போட்டு காண்பித்தார்களாம். அதன் பாடல் காட்சிகளை திரும்பத் திரும்ப போடச் சொல்லி பார்த்த சிம்பு இதற்காக அந்தப் படத்தின் இயக்குனர் கே.வி.ஆனந்த் மற்றும் நடிகர் ஸ்ரீகாந்த்க்கு போன்போட்டு கண்ணாபின்னாவென்று பாராட்டித் தள்ளிவிட்டாராம். இதைப் பார்த்துக் கொண்டிருந்தவர்கள் அப்பாவிடம் சிம்பு கற்றது தவிர, அவரிடம் கொஞ்சமும் இல்லாத இந்த பி.ஆர்.பணிகளை வேறு யாரிடம் கற்றிருப்பார் என்று கேள்வி எழுப்புகிறார்கள்.
 



Copyright © 1999 Ambalam, DishnetDSL.Ltd.