பொருத்தமான தலைப்பு என்றால் இதைவிட வேறு எது? ஒரு சினிமா இயக்குனர் உருவாகி வளர்ந்து சாதிக்கும் கதை இது. அதனாலேயே 'கோடம்பாக்கத்தில்' அதிக எதிர்பார்ப்பை கிளப்பியுள்ள படம் என்று சொல்லிக் கொள்கிறார்கள். நந்தா உதவி இயக்குனராக இந்த படத்தின் கதையில் வாழ்வைத் தொடங்குகிறார். தியா, தேஜாஸ்ரீ, இருவரும் கதாநாயகிகள். புரிந்திருக்குமே! அதாவது, கதைப்படி நந்தாவுக்கு காதலி தியா? தேஜாஸ்ரீ, நந்தாவின் படக் கதாநாயகி! இவர்களோடு படத் தயாரிப்பாளராக மணிவண்ணன். இவர்களோடு ரமேஷ்கண்ணா, முத்துக்காளை, 'கஞ்சா' கருப்பு, மனோபாலா, கலைராணி, விவேக்ஸ் லண்டன் போன்ற பலர் நடிக்கின்றனர். மேட்டூரைச் சுற்றியுள்ள கிராமங்களில் கதை நடப்பதாக அங்கேயே சென்று படமாக்கியுள்ளனர். படத்தில் சேரன், தம்பிராமையா, வேல்முருகன் என இன்னும் சில இயக்குனர்களும் நடித்துள்ளனர். படத்தில் ஒரு ஹிந்தி பாடலும் உண்டாம். கதைப்படி நந்தா பிரபல இயக்குனராகி பாலிவுட் சென்று கொடி கட்டுகிறார் என்று புரிந்து கொள்ள வேண்டும். இது தவிர 'சுராங்கணி' பாடலைப் பாடிய சிலோன் மனோகர், 'லஜ்ஜாவதியே' பாடலைப் பாடிய ஜாஸிகிஃப்ட் போன்றவர்கள் இந்தப் படத்தில் பாடல்கள் பாடியுள்ளனர். பாடல்களை எழுதியிருப்பது விஜய்ஸாகர், ஜீவன்மயில், ரஹீப்அலாம் போன்ற முற்றிலும் புதியவர்கள். சிற்பி இசையமைத்திருக்கும் இந்தப் படத்திற்கு ஒளிப்பதிவு செய்திருப்பது யூ.கே.செந்தில்குமார். கதை, திரைக்கதை, இயக்கம் - ஜெகன்ஜி. இவர் சேரனின் உதவியாளர் என்பதும், இந்தப் படம் அவரது இரண்டாவது படம் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஏஏஏ மூவிஸ் இன்டர்நேஷனல் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு வசனம் எழுதியிருப்பது பி.பாலமுருகன். சுரேஷ் அர்ஸ் படத்தொகுப்பு செய்கிறார்.
 



Copyright © 1999 Ambalam, DishnetDSL.Ltd.