மனோதத்துவ ஞானி சிக்மண்ட் ஃப்ராய்டின் கருத்து - எல்லா மனிதனுக்குள்ளும் ஒரு மிருகம் உறங்கிக் கிடக்கிறது, என்பதை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்ட படம் என்று முன்னுரை தருகிறார்கள். கதையைக் கேட்டால், 'காதல் கொண்டேன் II' என்று சொன்னால் தவறில்லை என்று தோன்றுகிறது. ஆனாலென்ன, இந்தப் படத்தின் கதாநாயகன் சின்ன வயதிலேயே சிறுவர் பள்ளிக்கு போய்... ஒன்றல்ல, இரண்டு பெண்கள் வாழ்க்கையில் குறுக்கிட்டு அவர்களால் ஏமாற்றப்பட்டதாக..... இடையில் மனித மிருகத்தின் கோரப்பல்லைக் காட்ட கடத்தல் போன்ற கொடூரத் தொழில் சார்ந்த சூழ்நிலையில் கதையமைக்கப்பட்டுள்ளது. தென்னவன் கதையின் கதாநாயகனாக நடித்துள்ளார். காயத்ரி, ஸ்ரீஜி என்ற இரண்டு பெண்கள் அறிமுகமாகிறார்கள். இவர்களுடன் சந்தான பாரதி, ஐசக், குருதத், சேரன்ராஜ், கார்த்திக், சௌந்தரராஜன், பாலாஜி, கணேஷ்பாபு, அருள், விஷ்வா போன்றவர்கள் நடித்துள்ளனர். அப்பாஸ் ரவி என்பவர் இசையமைக்க, யுகபாரதி, ஏகாதேசி, ராஜுமுருகன் போன்றவர்கள் பாடல்களை எழுதியுள்ளனர். பி.கண்ணன் மேற்பார்வையில் அழகிய மணவாளன் ஒளிப்பதிவு செய்துள்ளார். திரைக்கதை ஆலோசனை, வசனம் - மதன். படத்தின் கதை, திரைக்கதை அமைத்து இயக்கியிருப்பது கே.ஜி அசோக்.
 



Copyright © 1999 Ambalam, DishnetDSL.Ltd.