|
ஜுன்.R
படத்திற்கு வித்தியாசமான தலைப்பு
வைப்பது ஒரு யுக்திதான். ஆனால் இது கொஞ்சம் ஓவராக உள்ளதாகவே
தோன்றுகிறது. ஆனால் விபரம் விசாரித்தால் படக் கதாநாயகியின் பெயர் இது
என்கிறார்கள். படத்தின் இயக்குனர் கோலிவுட்டுக்கு புதுசு. பெயர் ரேவதி
எஸ் வர்மா. இவர் விளம்பர படங்கள் எடுத்து, பெயர் எடுத்தவர் என்று
தகவல். இவரது கணவனும் சினிமாக்காரர்தான் - மலையாள பட உலகில்
அறியப்பட்ட இயக்குனராம். இந்தப் படம் இவரது சொந்த வாழ்க்கை
அனுபவத்திலிருந்து பிரித்த எடுக்கப்பட்ட கதையை பின்னணியாகக் கொண்டது
என்கிறார்கள். கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் எல்லாம் ரேவதி எஸ்
வர்மாதான். அதாவது தமிழ்ப் படத்துறையில் இரண்டாவது ரேவதி. இயக்குனர்
பெண் என்றால் பெண்ணுக்கும், பெண்மைக்கும் முக்கியத்துவம் அளிக்கும்
கதையாகத்தானே இருக்கும். இந்தப் படத்திலும் மாற்றமில்லை. ஜோதிகா
கதாநாயகி என்று அறிவித்து படங்களுக்கான ஸ்டில் எல்லாம் எடுத்து
வெளியில் தந்துவிட்டார்கள். ஆனால் கதாநாயகன் யார் என்பதை இன்னும்
முடிவு கூட செய்யவில்லை. படத்தில் பெண்களின் அழிச்சாட்டம் எந்த
அளவுக்கு இருக்கும் என்பதற்கு சாட்சி - படத்தில் நடிக்கும் மற்ற
பிரபலங்கள். ஜோதிகாவுடன், குஷ்பூவும் சரிதாவும் கூட. படத்திற்கு
ஒளிப்பதிவு செய்வது மது அம்பாட். இவர் தற்போது ஐஸ்வர்யா ராய்
நடிக்கும் ஹாலிவுட் படத்தை ஒளிப்பதிவு செய்பவர். ஜோதி ஜெய மாருதி
என்பவர் படத் தொகுப்பு பணியேற்றுள்ளார். மலையாளப் பட உலகில்
அறியப்பட்ட ஷரத் என்பவர் இந்தப் படத்துக்கு இசையமைக்கிறார். இது
அவருக்கு முதல் தமிழ்ப் படம். சென்னை. பாண்டிச் சேரியில் படப்பிடிப்பு
நடக்க உள்ளது. படத்தைத் தயாரிப்பது ஐடியாவேல்ட் 1 செல்லுலாயிட்
நிறுவனம் சார்பாக ஏ. அன்சாரி.
|
|