பாலிவுட்டிற்கு சென்றுவிட்டு, நீண்ட நாட்களுக்குப் பின் மீண்டும் கோலிவுட் வந்திருக்கும் இயக்குனர் கே.எஸ்.அதியமான் சிந்தனையில் உருவாகும் இந்தப் படம் மாதவன், சதா ஜோடியாக நடித்தது. சதா இந்தப் படத்தில் மாடலழகி, திமிர் பிடித்த மனைவி, ஒரு குழந்தையின் தாய் என மூன்று பரிமாணங்களை வெளிப்படுத்துகிறாராம். அதோடு, இந்தப் படத்தில் இயக்குனர்கள் பிரதாப் போத்தன், ரமேஷ்கண்ணா மற்றும் மனோபாலா போன்றவர்களும் நடிக்கின்றனர். முன்னாள் ஹீரோயின்கள் சீதா, ரேகா, ஐஸ்வர்யா போன்றவர்கள் பல்வேறு வேடங்களில் இதில் தோன்றியுள்ளனர். இது போக வையாபுரி, கோவை சரளா, ராஜலக்ஷ்மி, சச்சு, நீலிமாராணி, ஸ்ரீரஞ்சனி, பேபி ருத்வா போன்றவர்களும் நடிக்கின்றனர். குழந்தை ருத்வா, 500க்கும் மேற்கண்ட குழந்தைகளைத் தேடி இறுதியில் தேர்வானவர். பி.எல்.தேனப்பன் தயாரிப்பில் உருவாகும் இந்தப் படத்தின் கதை, திரைக்கதை, வசனம் மற்றும் இயக்கம் - கே.எஸ்.அதியமான். சேது ஸ்ரீராம் படத்தின் ஒளிப்பதிவு பணிகளை கவனித்துக் கொள்ள, உதயசங்கர் ஒளித்தொகுப்பு செய்துள்ளார். பரத்வாஜ் இசையமைக்கும் இந்தப் படத்தின் பாடல்களை பா.விஜய், சினேகன், விவேகா, தேன்மொழியன் போன்றவர்கள் எழுதியுள்ளனர். இந்தப் படத்தின் இன்னொரு சிறப்பம்சம், பொழுதுபோக்க மாதவன் வைத்திருந்த குட்டி ஹெலிகாப்டர் படத்தில் பங்கேற்று முக்கிய திருப்புமுனையாக அமைவது. அதோடு, திரைப்படங்கள் பலவும் திருமணத்தோடு முடிந்துவிடும்போது அதற்கு பிறகான விஷயங்களை இப்படம் பேசுகிறது என்கிறார்கள்.



Copyright © 1999 Ambalam, DishnetDSL.Ltd.