வெல்டன், காதல் செய்ய விரும்பு ஆகிய வெற்றிப் படங்களைத் தொடர்ந்து பார்கவன் இயக்கும் 3வது படம் 'ஒரு காதல் செய்வீர்'.

காதல் செய்ய விரும்பு படத்திற்கு பின் இயக்குனர் பார்கவனும் கதாநாயகன் எஸ்.ஏ.சந்தோசும் இணையும் இரண்டாவது படம். சிதம்பர ரகசியம், சஹானா போன்ற டி.வி. தொடர்களில் நடித்துவரும் கிருஷ்ணா, இப்படத்தில் இரண்டாவது கதாநாயகனாக அறிமுகமாகிறார். இப்படத்தின் அனைத்துப் பாடல்களுக்கும் நடனம் அமைத்தவர் நடன இயக்குனர் பாலாஜி. படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கும் சந்திரசேகர் கிளைமாக்ஸ் சீனில் உருக்கமாக நடித்து, படக் குழுவினர்களையெல்லாம் கண் கலங்க வைத்துவிட்டாராம். புதுமுகங்களுக்கு முன்னுரிமை கொடுத்துவரும் இயக்குனர் பார்கவன், இப்படத்தில் கூத்துப் பட்டறை நடிகர்களுக்கும் வாய்ப்புக் கொடுத்துள்ளார்.

இந்தப் படத்தின் கதாநாயகி அர்ச்சனா கல்ராணி கன்னடப் படங்களில் நடித்து பெங்களூரில் தங்கியிருந்தாலும் அவரது பூர்வீகம் தமிழ்நாடு. இப்படத்தின் மூலம் கேமராமேனாக அறிமுகமாகும் விசாகன் இயக்குனர் நாகாவிடம்  ஒளிப்பதிவாளராக பணியாற்றியவர்.

சண்டைக் காட்சிகளை தத்ரூபமாக அமைத்திருப்பவர் ஸ்டண்ட் மாஸ்டர் இந்தியன் பாஸ்கர். இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கி ஊட்டி, குன்னூர், ஏலகிரிமலை, கோவா போன்ற எழில் கொஞ்சும் இடங்களில் படப்பிடிப்பு நடத்தப்பட்டுள்ளது.



Copyright © 1999 Ambalam, DishnetDSL.Ltd.