'ஆட்டோகிராப்' என்று பெயர் வைத்ததற்கு பிராயசித்தம் செய்வதாக சேரன் நினைத்தாரோ என்னவோ.... இத்தனை பெரிய தமிழ்ப் பெயராக வைத்து தாக்கிவிட்டார். படத் தயாரிப்பு கம்பெனி, அதே ட்ரீம் தியேட்டர்ஸ்தான். இந்த படத்தின் நாயகன் - பரத்தான். அவருக்கு ஜோடியாக மல்லிகா கபூர். ஹீரோயின் ஒருவர் மட்டும்தானா என்று கேட்கத் தோன்றுகிறது. முந்தைய படம் போல இல்லாமல், இப்படத்தில் ஒரே ஒளிப்பதிவாளர்தான். எஸ்.டி.விஜய்மில்டன். அவர்தான் இந்தப் படத்தின் கதை, திரைக்கதை, வசனமுடன் இயக்கமும். காதல் என்றால் - மிகச் சரியாகப் புரிந்து கொள்ளப்படுவதும், அதற்கு நேர் எதிராக மிக மோசமாக தவறாய்ப் புரிந்து கொள்ளப்படுவதும் என்று போகிறது கதை. இந்த படத்திற்கு இசையமைப்பது யுவன்சங்கர்ராஜா. பாடல் எழுதுவது கபிலன். சசிக்குமார் படத் தொகுப்பு செய்யும் இந்தப் படம் ஊட்டி, கேரளா போன்ற இடங்களில் படமாக்கப்பட்டுள்ளது.
 



Copyright © 1999 Ambalam, DishnetDSL.Ltd.