இந்த மாதம் திரைக்கு எதிர்பார்க்கப்படும் இப்படத்தின் டைட்டில் தமிழ் டைட்டில்தானா என்ற கேள்வியிருப்பது தனிக்கதை. அந்த சர்ச்சைதான் அடங்கிவிட்டதே என்ற தைரியமா என்று தெரியவில்லை. இதற்கு அர்த்தம் என்ன என்று கேட்டால், இந்தப் படத்தின் முக்கிய கேரக்டர்களின் முதலெழுத்தை எல்லாம் சேர்த்தால் ஏபிசிடி என்கிறார்கள். அப்ப ஆங்கில டைட்டில்தானே! எப்படியோ போங்கப்பா! கதை, - தேசிய விருது பெற்ற 'ஆட்டோகிராப்' திரைப்படத்தின் சாயலில் உள்ளது என்பதை இயக்குனர் சரவண சுப்பையாவே ஒப்புக் கொள்கிறார். இருந்தாலும், வித்தியாசத்தை திரையில் கண்டு ரசியுங்கள் என்கிறார். ஆக, தனது வாழ்க்கையின் வெவ்வேறு காலகட்டங்களில் மூன்று வெவ்வேறு பெண்களைக் காதலிக்கும் ஒரு இளைஞனைப் பற்றிய கதை. அந்த அதிர்ஷ்டக்கார(!) இளைஞராக ஷாம் நடித்திருக்கிறார். அவரது காதலிகளாக சினேகா, நந்திதா, அபர்ணா ஆகியோர் நடித்திருக்கிறார்கள். இத்துடன் இந்தப் படத்தில் இயக்குனர் சரவண சுப்பையாவே வில்லன் கேரக்டரில் நடித்திருக்கிறார். ஒருகட்டத்தில் ஷாமை காதலித்த சினேகா, பின்னாளில் 'இந்த' வில்லனின் மனைவியாகிறாராம். டி.இம்மான் இசையமைப்பில் 9 பாடல்கள் இடம் பெறும் இந்தப் படத்தில் அபர்ணாகூட தான் 'நடித்திருப்பதாக' நம்புகிறார் என்பதுதான் விசேஷம். படத்திற்கு ஒளிப்பதிவு செய்வது ராஜரத்தினம்.
 



Copyright © 1999 Ambalam, DishnetDSL.Ltd.